உலகம்

கொரோனா பாதிப்புகள் இன்னும் இரு ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்பு - ஆராய்ச்சியாளர்கள்

கொரோனா பாதிப்புகள் இன்னும் இரு ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்பு - ஆராய்ச்சியாளர்கள்

webteam

கொரோனா வைரஸ் பாதிப்புகள் இன்னும் இரு ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இன்னும் இரு ஆண்டுகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பலருக்கும் நோய் தொற்றின் அறிகுறியே இல்லாததால், கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவது கடினம் என்று அப்பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி பிரிவு கூறியுள்ளது.

உலகில் மூன்றில் இரு பங்கு மக்களையாவது பாதித்த பின்னர் அதற்கேற்ற எதிர்ப்பு சக்தி மனித உடலில் உருவான பின்பே இந்நோய் கட்டுக்குள் வரும் என அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 2022க்கு பிறகும் அலையலையாக கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.