கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவரின் உருக்கமான பதிவு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. உயிரைக்கொல்லும் எனத்தெரிந்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் காப்பாற்றுவதற்காக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த செவிலியர் ஒருவரின் பதிவு அனைவரையும் உருகச் செய்துள்ளது. அந்தப் பதிவில், “நான் ஒரு செவிலியர். இந்த சூழ்நிலையில் நான் சுகாதார அவசர நிலையை சந்திக்கிறேன். நான் மிகவும் பயத்தில் இருக்கிறேன், ஆனால் நான் மளிகை பொருட்களை வாங்கப் போகவில்லை. பணிக்கு செல்வதற்கு பயந்துள்ளேன். எனது முகக்கவசம் சரியாக பொருந்தவில்லை என்பதால் நான் பயந்துள்ளேன். இல்லையென்றால் அழுக்கான உறைகளை தொட்டதால் பயத்தில் உள்ளேன். ஒருவேளை எனது லென்சுகள் எனது கண்களை முழுவதும் மறைக்கவில்லை என்பதாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களிலாளோ பயந்துள்ளேன்.
நான் உடல் ரீதியாக சோர்ந்து போயுள்ளேன். எனது சக பணியாளர்களும் என்னைப்போல் தான் உள்ளனர். இந்த சூழ்நிலையில் பணிபுரிவது தான் அதற்கு காரணம். ஆனால் எங்கள் பணியை செய்யவிடாமல் இது தடுக்கவில்லை. நாங்கள் அதை சரியாக செய்துள்ளோம். எனது நோயாளிகளை குணப்படுத்துவதுடன், நான் அவர்களை நன்றாகவும் பார்த்துகொள்கிறேன். ஏனென்றால் எனது பணியை நான் காதலிக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இதன்மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களின் இந்த முயற்சி வீணாகிவிடக்கூடாது. தயவுசெய்து விழிப்புடனும், வீட்டிலும் இருங்கள். அப்படி இருந்தால் பலவீனமானவர்களை நீங்கள் பாதுகாக்க முடியும். நம்மை போன்ற இளமையானவர்களே கொரோனாவை எதிர்க்க முடியவில்லை. நமக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட நேரிடுகிறது. இல்லையென்றால் மோசமடைகிறோம். மற்றவர்களுக்கும் வைரஸ் பரவ காரணமாகிறோம். வீட்டில் தனிமைப்பட்டு இருக்கும் அளவிற்கு நான் வசதியாக இல்லை. நான் பணிக்கு சென்று எனது கடைமையை செய்கிறேன். நீங்களும் உங்கள் கடைமையை செய்யுங்கள். நான் வேண்டிக் கேட்கிறேன்” என அந்த செவிலியர் தெரிவித்துள்ளார்.