உலகம்

கொரோனா: சீனா மீது எழும் சந்தேகங்கள்

jagadeesh

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சீனா மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக சீனா முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என சர்வதேச சுகாதார பணியாளர்கள் கூறுகின்றனர். சீனா முறையான தரவுகளை வெளியிடாததால், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சீனா ஏன் முழுமையான தகவலை வெளியிட தயங்குகிறது என்ற வினா எழுப்பப்படுகிறது.

முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவிய வுஹான் நகரில்தான் சீனாவின் பயோ ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆய்வகத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும் தவறுதலாக அது சீனாவிலேயே பரவி விட்டதாகவும் கூறப்படுகிறது.

கனடாவில் பணிபுரிந்து வந்த சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவர் கடந்த ஆண்டு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொரோனா வைரஸை சீனாவுக்கு அனுப்பியதாகவும், அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு இத்தகைய வைரஸைக் கையாளும் அனுபவம் இல்லாததால் அது பரவி இருக்கக் கூடும் என்றும் சந்தேகம் எழுவதாக சிலர் கூறுகின்றனர்.

2015-ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பிர்பிரைட் இன்ஸ்டியூட் சார்பில் கொரோனா வகை வைரஸுக்கான மருந்து உருவாக்கத்திற்காக காப்புரிமை பெற பதிவு செய்யப்பட்டது. எனவே அந்த மருந்து நிறுவனத்தின் சதியே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.