உலகம்

கொடூர கொரனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் 170 பேர் உயிரிழப்பு

கொடூர கொரனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் 170 பேர் உயிரிழப்பு

jagadeesh

சீனாவில் கொரனா வைரஸ் தாக்கியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பரவ தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில் சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வுஹான் நகரில் இருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்ட ஜப்பானியர்களில் 3 பேருக்கு கொரனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது. கொரனா வைரஸ் தாக்கம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு இன்று கூடி அவசர ஆலோசனை நடத்த உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து பின்லாந்திலும் கொரனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவை தவிர 19 நாடுகளில் வைரஸ் பரவியுள்ளதோடு, 100க்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சீனாவுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன. வுஹான் நகரில் இருந்து விமானம் மூலமாக அமெரிக்கா அழைத்து வரப்பட்டவர்களுக்கு மருத்துவ சோதனை நடைபெற்று வருகிறது.

ஹுவானில் இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனாவில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வுஹானில் இருக்கும் தங்கள் குடிமக்களை மீட்க நியூசிலாந்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தயாராகி வருகின்றன.