உலகம்

பிரான்ஸில் தீவிரமாக பரவும் கொரோனா - ஒரேநாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு

பிரான்ஸில் தீவிரமாக பரவும் கொரோனா - ஒரேநாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு

Veeramani

உலகம் முழுவதும் ஒமைக்ரான் திரிபு வைரஸின் அச்சம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்பாக ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத அளவுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸில் ஒவ்வொரு நிமிடத்திற்கு இரண்டு பேர் என்ற விகிதத்தில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதனால், முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா திரிபு காரணமாக பிரான்ஸில் உள்ள மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவர்களும் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், நோய் பரவலின் வேகம் அதிகரித்திருப்பது, அந்நாட்டு மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொதுஇடங்களில் அனுமதி என்ற திட்டத்தை செயல்படுத்த பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், ஜனவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.