உலகம்

கொரோனா நெருக்கடி - தேவைக்கேற்ற பொருள்களை விநியோகிக்க இயலாத நிலையில் நைக் நிறுவனம்

கொரோனா நெருக்கடி - தேவைக்கேற்ற பொருள்களை விநியோகிக்க இயலாத நிலையில் நைக் நிறுவனம்

Veeramani

அமெரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான நைக் (NIKE) , தேவைக்கேற்ப பொருள்களை விநியோகிக்க இயலா நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் இவ்வருடத்திற்கான தங்கள் விற்பனை இலக்கை மாற்றி அமைக்கவும் நைக் (NIKE ) உத்தேசித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளும் முழு முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதால் தயாரிப்பு மற்றும் விநியோகச் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் NIKE நிறுவனத்தின் காலணிகளுக்கு வரவேற்பு அதிகம், வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் இந்த நிறுவனத்தின் 75 விழுக்காடு காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அங்கு அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு மட்டும் சுமார் 10 வாரங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் தயாரித்த பொருள்களை ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சேர்க்கும் கால அளவும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.