உலகம்

இஸ்ரேலில் குவிந்த வெள்ளை நீர்ப் பறவைகள்

இஸ்ரேலில் குவிந்த வெள்ளை நீர்ப் பறவைகள்

webteam

இஸ்ரேலில் இனப் பெருக்கம் மற்றும் உணவுக்காக சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நீர் பறவைகள் குவிந்து வருவது உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருங்கடல் பகுதியில் இருக்கும் வெள்ளை நீர்ப் பறவைகள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதங்கள் வரை ஆப்பிரிக்காவில் உள்ள சூடானில் குடிபெயர்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக்காக சூடானுக்கு பறந்த நீர் பறவைகள் வழியில் உணவுக்காகவும், இன பெருக்கத்துக்காகவும் இஸ்ரேலின் மிஸ்மார் ஹஷ்ரான் என்ற இடத்தில் நீர் நிலை நிரம்பிய சரணலாயத்தில் வந்திறங்கியுள்ளன. இந்நிலையில் இங்குள்ள மீன்கள் அவற்றுக்கு போதாது என்பதால் இஸ்ரேல் அரசு சார்பில் உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளை நீர் பறவைகள் அங்கு வந்து சேர்ந்திருப்பது உயிரின ஆர்வலர்களை வெகுவாக மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.