உலகம்

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நியூயார்க் டைம்ஸ் சர்ச்சை கருத்து

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நியூயார்க் டைம்ஸ் சர்ச்சை கருத்து

webteam

ட்ரம்ப்-ன் செல்வாக்கு குறைந்துள்ளதால், அமெரிக்காவின் 2020-ல் நடக்கும் அடுத்த அதிபர் தேர்தலில், அவருக்கு பதிலாக மைக் பென்ஸ் போட்டியிடுவார் என்று நியூயார்க் டைம்ஸ் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளியான தகவலை துணை அதிபர் மைக் பென்ஸ் மறுத்திருக்கிறார். அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு செல்வாக்குக் குறைந்து வரும் நிலையில், அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் அவருக்குப் பதிலாக மைக் பென்ஸ் போட்டியிடுவார் என்றும் நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்காக மறைமுகமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை மைக் பென்ஸ் மறுத்திருக்கிறார். ஆனால் தங்களது செய்தி முற்றிலும் ஆதாரங்களுடன் எழுதப்பட்டது என நியூயார்க் டைமஸ் கூறியிருக்கிறது.