ஜான்சன்&ஜான்சன் கூகுள்
உலகம்

’ஜான்சன் & ஜன்சன் பவுடரால் புற்றுநோய்’.. 15 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

இவான் ப்ளாட்கின் போன்று ஏராளமானோர் ஜான்சன் & ஜான்சன் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அனைவருமே ஜான்சன்&ஜான்சன் டாலி தயாரிப்புகள் அஸ்பெஸ்டாஸ், மீசோதெலியோமா மற்றும் பிற புற்றுநோய்களை உருவாக்குகிறது என்று குரல் எழுப்பியுள்ளனர்

Jayashree A

அமெரிக்க ஐக்கிய மாநிலங்களுள் ஒன்றான கனெடிகட் பகுதியைச் சேர்ந்த இவான் ப்ளாட்கின் என்பவர், 2021 ஆண்டு முதல் ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு அவர் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மருத்துவரிடம் சென்ற அவருக்கு, மீசோதெலியோமா என்ற அரியவகை புற்றுநோய் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன் பவுடரின் ஒவ்வாமையால்தான் தனக்கு மீசோதெலியோமா நோய் உறுவானதாகக் கூறி நீதிமன்றத்தில் ஜான்சன் & ஜான்சன் கம்பெனி மீது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இவரின் கூற்றை ஆராய்ந்த சுப்பீரியர் நீதிமன்ற நடுவர் குழு, ஜான்சன் & ஜான்சன் நஷ்ட ஈடாக இவான் ப்ளாட்கிற்கு 15 மில்லியன் டாலர் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இவான் ப்ளாட்கின் போன்று ஏராளமானோர் ஜான்சன் & ஜான்சன் மீது வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அனைவருமே ஜான்சன் & ஜான்சன் டாலி தயாரிப்புகள் அஸ்பெஸ்டாஸ், மீசோதெலியோமா மற்றும் பிற புற்றுநோய்களை உருவாக்குகிறது என்று குரல் எழுப்பி இருந்த நிலையில், இவான் ப்ளாட்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது  ஜான்சன் & ஜான்சன் மீது அதிர்ப்திக் கொண்ட 62000 அதிகமானோருக்கு கிடைத்த பதிலாகும்.

இது போன்று 2017ம் ஆண்டு 62 வயதான லோயிஸ் ஸ்லெம் என்ற பெண், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்திய பின்னர்தான், தனக்கு கருப்பை புற்றுநோய் வந்தது என்று வழக்கு தொடர்ந்த பெண்ணொருவருக்கு, அந்த நிறுவனம் 110 மில்லியன் டாலருக்கு மேலான அபராத தொகை வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க… தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையல்ல … எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவையே என்று கூறுகிறது. இருப்பினும் 2020ம் ஆண்டு டால்க் அடிப்படையிலான தூள் தயாரிப்புகளை அமெரிக்க சந்தையில் இருந்து ஜான்சன்&ஜான்சன் திருப்பப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.