கிளெமெண்ட் டெல் வெச்சியோ file image
உலகம்

19 வயதில் உலகப் பணக்காரராக மாறிய இளைஞர்.. இத்தனை கோடிகளுக்கு அதிபதியானது எப்படி?

வெறும் 19 வயதில் உலகப் பணக்காரராக மாறி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார் இத்தாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். மிக இளம் வயதில் இந்த இலக்கை எட்டியது எப்படி என்பதை பார்க்கலாம்.

யுவபுருஷ்

உலகப் பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியில் தற்போது முகேஷ் அம்பானி 9-வது இடத்தில் இருக்கிறார். அத்தனையையும் தாண்டி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துளார் கிளெமெண்ட் டெல் வெச்சியோ என்ற 19 வயது இளைஞர்.

போர்ப்ஸ் நிறுவனத்தின் தகவல்படி, இவரின் சொத்து மதிப்பு 3.5 பில்லியன், அதாவது சுமார் 29 ஆயிரம் கோடியாக இருக்கிறது.

பிரபல கண் கண்ணாடி நிறுவனமான எஸ்சிலர் லக்சோட்டிகாவின் தலைவராக இருந்த இத்தாலிய கோடீஸ்வரர் லியோனார்டோ டெல் வெச்சியோ, கடந்த ஆண்டு தனது 87வது வயதில் உயிரிழந்தார். இவரது 2.1 லட்சம் கோடி சொத்துகள் அனைத்தும் மனைவி மற்றும் 6 குழந்தைகளுக்குச் சென்றது. இதில் ஒரு மகனான கிளெமெண்ட் டெல் வெச்சியோ சுமார் 29 ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். இதன்மூலம் கடந்த ஆண்டின் இளம் வயது கோடீஸ்வரராகவும் மாறியுள்ளார்.

மேலும் பல முன்னணி நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ள கிளெமெண்ட் டெல் வெச்சியோ, தற்போதைக்கு பிசினஸில் இறங்காமல் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பில் ஆர்வம் கொண்ட இவர் முதலில் பட்டம் பெற்றபிறகு அடுத்தடுத்த காரியங்களில் இறங்குவார் எனத் தெரிகிறது. இவர் மட்டுமல்லாது மூத்த சகோதரர்களும் பிசினஸில் கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது.