ரஷ்யா முகநூல்
உலகம்

ரஷ்யா | கிறிஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்!

PT WEB

ரஷ்யாவில் காகசஸ் மாகாணத்தில் உள்ள தாகெஸ்தான் நகரில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற போது, திடீரென அங்கு நுழைந்த சில பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.

அந்த சத்தத்தை கேட்ட மக்கள் அங்கிருந்து சிதறி ஓட தொடங்கினர். அப்போது அங்கிருந்த மதபோதகரை பயங்கரவாதிகள் கொடூரமாக கொலை செய்தனர். அதே போன்று அந்த மாகாணத்தில் உள்ள பிற தேவாலயங்கள் மற்றும் காவல்நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி தீவைத்தனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் காவலர்கள், மதபோதர் என 20 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ரஷ்ய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

‘நடந்த இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 24 - 26 ஆம் தேதி வரை துக்க நாட்கள் கடைபிடிக்கப்படும்; தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்; பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன’ என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.