model image freepik
உலகம்

சீனா| கர்ப்பிணிப் பெண்ணைப் பயமுறுத்திய நாய்.. கலைந்த கரு.. இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Prakash J

சமீபகாலமாக நாய் தாக்குதல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி ஒருவர், ராட்வெய்லர் நாய்களின் கொடூரமான தாக்குதலுக்கு ஆளானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சீனாவில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, நாய் ஒன்று பயமுறுத்திய சம்பவத்தில் அவருடைய கரு கலைந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

model image

சீனாவைச் சேர்ந்த யான் என்ற பெண், IVF மூலம் கருத்தரித்துள்ளார். இதற்காக, அவர் மூன்று ஆண்டுகளைச் செலவழித்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் பொருட்கள் வாங்க தமது குடியிருப்பில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த கட்டடத்தில் இருந்து வெளியில் வந்த நாய் ஒன்று, இவரைக் கண்டு குரைத்துள்ளது. இதில் பயந்துபோன அவர், சற்றுப் பின்னோக்கி நகர்ந்துள்ளார்.

இதையும் படிக்க: ”மூச்சுவிடக் கூட..”|அதிக பணிச்சுமையால் இளம்பெண் மரணம்.. புனே நிறுவனத்திற்கு தாயார் உருக்கமான கடிதம்!

இந்தப் பயத்தில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் வலி வந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கருவைச் சோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அதிர்ச்சியில் கருவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக கூறியுள்ளனர். அதாவது கரு கலைந்துள்ளது. இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட யான், நாய் உரிமையாளரான லீ மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிவில் ஷாங்காய் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

model image

இந்த சம்பவம் குறித்து யான், “நான் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் ஆகிறது. நாய் என்னை பயமுறுத்திய பிறகு, என் வயிற்றில் வலி ஏற்பட்டது. நான் மருத்துவமனைக்குச் சென்றேன். ஆனால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இந்தக் குழந்தையைப் பெறுவது எனக்கு மிகவும் கடினம். நான் மூன்று ஆண்டுகளாக IVF சிகிச்சை பெற்று வந்தேன். இப்போது எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் நான் மனம் உடைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எல்லையில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் சீனா! படம்பிடித்த செயற்கைக்கோள்.. உற்றுநோக்கும் இந்திய ராணுவம்