இந்திய ரஃபேல் விமானம் pt
உலகம்

இந்திய பகுதியை ஒட்டி பறந்த சீன உளவு பலூன்; சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படையினர்!

நேற்று இந்திய சீன எல்லையின் கிழக்கே, சீனாவின் உளவு பலூனானது சுமார் 55,000 அடி உயரத்தில் பறந்துள்ளது. அந்த பலூனை ரஃபேல் விமானத்தைக் கொண்டு இந்திய விமானப்படையானது சுட்டு வீழ்த்தியதாக தெரியவந்துள்ளது.

Jayashree A

நேற்று இந்திய வானத்தில் பறந்த சீன உளவு பலூனை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் அனுமதி இல்லாமல் அந்நாட்டின் எல்லைப்பரப்பிலோ அல்லது எல்லையைக் கடந்தோ ட்ரோன்களை பறக்கவிடுவது அல்லது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதாவது ஒரு வகையில் உளவு பார்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

அந்த வகையில் நேற்று இந்திய சீன எல்லையின் கிழக்கே, சீனாவின் உளவு பலூனானது சுமார் 55,000 அடி உயரத்தில் பறந்துள்ளது. இது இந்திய ராணுவத்தினரிடையே பதற்றத்தைனை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்திய இராணுவனத்தின் அனுமதியை அடுத்து, இந்திய விமானப்படையானது வங்காளத்தில் உள்ள ஹசிமாரா பகுதியிலிருந்து, சீன உளவு பலூனை ரஃபேல் விமானத்தைக் கொண்டு சுட்டு வீழ்த்தியதாக தெரியவந்துள்ளது. மேலும் வங்காள விரிகுடா, அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும் சீன பலூன் காணப்பட்டாலும், அது இந்திய எல்லையைக் கடக்காததால், இந்தியப் படைகள் அந்த பலூனை சுட்டு வீழ்த்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்திய வானத்தில் சீன உளவு பலூன்கள் பறக்க இருப்பது குறித்து இந்திய விமானப்படை இந்திய அரசாங்கத்திற்கு முன்னமே எச்சரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2013ல் அமெரிக்காவின் மூன்று மிக முக்கியமான அணு ஆயுத ஏவுதளங்களில் ஒன்றான மவுண்டானா மாகாணத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்தது. அதை F-22 ஃபைட்டர் ஜெட் மூலம் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

அமெரிக்காவின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்த சீனாவானது, “இந்த பலூனானது வானிலை மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அமெரிக்க வான்வெளிக்குள் தற்செயலாக நுழைந்துவிட்டது” எனக் கூறியிருந்தது. இருப்பினும், பெய்ஜிங்கின் இந்த கூற்றுக்களை அமெரிக்க அதிகாரிகள் நிராகரித்தனர்.

சீனா இதுபோன்ற உளவு வேலைகளை தொடர்ந்து செய்து வருவது உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்து வருகிறது.