சீனா  எக்ஸ்
உலகம்

3 நாட்களில் மரணம்.. புதிய வைரஸைக் கண்டுபிடித்த சீனா. அச்சத்தில் உலக நாடுகள்!

மூன்றே நாட்களில் உயிரைக் கொல்லும் புதிய வைரஸை சீனா உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல கோடி உயிர்கள் காவு வாங்கப்பட்டன. மேலும் உலக அளவில் பலவித பேரிழப்புகளும் பொருளாதாரரீதியாக ஏற்பட்டன. இந்த நிலையில், மீண்டுமொரு வைரஸை சீனா உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் ஹெபெய் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளதாகவும், இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: உலகில் அதிக முறை கைதான போதை ஆசாமி.. 6,000 நாட்கள் சிறைவாசம்.. அமெரிக்க நபருக்கு நேர்ந்த சோகம்!

எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் சீன ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும் எனவும், எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் புண்கள் ஏற்பட்டு, இறுதியில் அவற்றின் கண்பார்வையைச் செயலிழக்கச் செய்திருக்கிறது. மேலும், அந்த எலிகளில் பல உறுப்பு செயலிழப்புகள் ஏற்பட்டிருப்பதுடன் இறுதியில் மூன்று நாட்களில் அவை இறந்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது எபோலா வைரஸ் நோயாளிகளின் மற்றொரு அறிகுறி எனச் சொல்லப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு, அறிகுறி குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கம் என தெரிவித்த சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர். எனினும், சீனா உருவாகியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ், மீண்டும் அச்சுறுத்தலாக அமையலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: “என் நண்பனை சுட்டுக்கொன்னுட்டீங்களா?” - ரஷ்ய ராணுவத்தை பழிவாங்க 300 கி.மீ. நடந்துசென்ற உயிர் நண்பர்!