சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டின் ஒரு பகுதி குடியிருப்பில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் பயந்து ஒடினர்.
சீனாவும் பிரான்ஸும் இணைந்து லாங் மார்ச் 2-சி என்ற ராக்கெட்டை நேற்று விண்ணில் ஏவியது. சில நிமிடங்களில் ராக்கெட்டின் ஒரு பகுதி குடியிருப்பில் விழுந்ததுடன் வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் பயந்து ஓடினர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக சீன விண்வெளித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்மீன்கள் வெடிப்புகளை கண்காணிக்கும் சக்திவாய்ந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையை அடைந்துள்ளதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானியல் ஆராய்ச்சியில் இந்த செயற்கைக்கோள் முக்கிய பங்காற்றும் எனவும் சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.