அலிபாபாவின் இணை நிறுவனரும், சீன நாட்டை சேர்ந்த தொழிலதிபருமான ஜாக் மா கடந்த அக்டோபர் 24 வாக்கில் தலைமறைவாகி இருந்தார். சீன அரசு கொடுத்த நெருக்கடி தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. “அவர் வீட்டுச் சிறையில் உள்ளார்”, “சிங்கப்பூருக்கு பறந்து விட்டார்” என்றெல்லாம் வதந்திகள் தீயாய் பரவின.
இந்நிலையில் அவர் சீனாவின் ஹைனான் தீவு பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளதாகவும், அங்கு கால்ப் விளையாடியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி 20 அன்று ஊரக பகுதியை சேர்ந்த ஆசிரியர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலில் ஜாக் மா கலந்து கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இந்நிலையில் முதல்முறையாக அக்டோபருக்கு பிறகு ஜாக் மா தனது தரிசனத்தை கொடுத்திருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு ஆனந்தத்தை கொடுத்துள்ளது.