உலகம்

கொழும்புவில் சீனாவால் கட்டப்படும் துறைமுக நகரம்

கொழும்புவில் சீனாவால் கட்டப்படும் துறைமுக நகரம்

jagadeesh

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே சீனாவால் கட்டப்படும் துறைமுக நகரை பிரதமர் மகிந்த ராஜபக்ச தொடங்கி வைத்துள்ளார்.

கொழும்புவுக்கு அருகே துறைமுக நகர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த நிறுவனம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 269 ஹெக்டேர் பரப்பளவில் இந்த துறைமுக நகரை கட்டமைத்து வருகிறது. பொருளாதார மையமாகவும் , தொழில் நகரமாகவும் இது திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவிகித நிலம் வீடுகளுக்காகவும் 50 சதவிகித நிலம் மற்ற கட்டமைப்புகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது‌. 

இந்தப் பகுதியை அதிகாரப்பூர்வமாக இலங்கை வரைபடத்துடன் இணைத்து‌, முதலீட்டாளர்களுக்காக நகரை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கொழும்புவில் நடைபெற்றது. பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் இலங்கைக்காக சீன தூதர் செங் மற்றும் பிற அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வாண வேடிக்கைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன. மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது 2014ஆம் ஆண்டு இந்த துறைமுக நகருக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த துறைமுக நகரின் சில பகுதிகள் சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இதனால் இந்த கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என இந்தியா அதிருப்தி தெரிவித்து வருகிறது‌.