உலகம்

பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமை - போராட்டக்காரர்களை எச்சரிக்கும் சீன ராணுவம்

webteam

ஹாங்காங் போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக சீன‌ ராணுவம் வீடி‌யோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹாங்காங்கில், குற்றச்சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படுவோரை சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு‌ வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தியதால் கைதிகளை நாடுகடத்தும் மசோதாவை ஹாங்காங் அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. 

இருப்பினும், மசோதாவை நிரந்தரமாக திரும்பப்பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு எச்‌சரிக்கைவிடும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சீன ராணுவம் ஒடுக்குவது போலவும், துப்பாக்கிச்சூடு நடத்துவது போலவும் ஒத்திகை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வது ராணுவத்தின் கடமை என்றும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.