நீர்மூழ்கிக் கப்பல் ட்விட்டர்
உலகம்

விபத்தில் சிக்கிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்? 55 பேர் பலி..தான் விரித்த வலையில் தானே சிக்கிய சீனா!

சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் சிக்கி, அதிலிருந்த 55 பேர் உயிரிழந்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இத்தகவலை சீனா மறுத்துள்ளது.

Prakash J

அமெரிக்க மற்றும் பிரிட்டன் கப்பல்களுக்கு சீனாவினால் விரிக்கப்பட்டு இருந்த வலையில் அந்த நாட்டின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில் 55 சீன வீரர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் சீனாவுக்கும், கொரிய தீபகற்பத்திற்கும் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் நடைபெற்று இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த செய்தியை சீனா மறுத்துள்ளது. பிரிட்டன் உளவுத்துறை இந்த நீர்மூழ்கிக் கப்பல் சீனாவுக்கு சொந்தமான, 093-417 என அடையாளம் கண்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 21 அன்று கப்பலில் பயணித்த 55 சீன வீரர்களும் ஆக்சிஜன் இன்றி உயிரிழந்திருப்பதாகவும், அவர்களில் கேப்டன் மற்றும் 21 அதிகாரிகளும் அடங்குவர் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்தச் செய்தியில், ‘அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கப்பல்களைச் சிக்கவைப்பதற்கு என்று பீஜிங்கால் ஏற்படுத்தப்பட்ட சங்கிலி மற்றும் நங்கூரத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் மோதியுள்ளது. இதையடுத்து கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து கப்பலை மீட்பதற்கு சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடியுள்ளனர். ஆனால், கப்பலில் ஆக்சிஜன் இழப்பு ஏற்பட்டு, நச்சுவாயு பரவி கப்பலில் இருந்தவர்கள் இறந்துள்ளனர்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆசிய விளையாட்டு: மீண்டும் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா? - முதலில் வீசும் போது நடந்தது என்ன?