spider in ear Twitter
உலகம்

”டாக்டர்! காதுல ரிங்குனு சத்தம் வந்துட்டே இருக்கு” - பெண்ணை பரிசோதித்த டாக்டருக்கு அதிர்ச்சி!

காதுக்குள்ள ஏதோ சத்தம் வந்துட்டே இருக்கு, வலியும் அதிகமா இருக்கு என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணை பரிசோதித்த டாக்டருக்கே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம், சீனாவில் நடந்துள்ளது.

Rishan Vengai

எண்டோஸ்கோபி மூலம் பரிசோதித்து பார்க்கும்போது, காதுக்குள் எதுவும் இல்லை என்பதும், சுத்தமாக இருப்பதும் தெரியவந்தது. ஆனால் சிறிது நேரம் கழித்து செவிப்பறை அசைவது தெரிந்ததால், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 20ஆம் தேதியன்று, காதுக்குள் ஏதோ ரீங்கென சத்தம் வந்துகொண்டே இருக்கிறது என்றும், வலி அதிகமாக இருக்கிறது என்ற புகாரின் பேரில், ஹுய்டோங் கவுண்டி மக்கள் மருத்துவமனைக்கு பெண் வருவர் வந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, காதுக்குள் எதுவும் இல்லை என்பதும், காது மிகவும் சுத்தமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

ear pain

ஆனாலும் ஏதோ சத்தம் வந்துகொண்டே இருப்பதாகவும், வலியும் அதிகமாக இருப்பதாகவும் அந்த பெண் தொடர்ந்து கூற, எண்டோஸ்கோபி மூலம் பரிசோதிக்கலாம் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் சென்றுள்ளனர்.

கேமரா பொறுத்தப்பட்ட சாதனம் மூலம் எண்டோஸ்கோபி செய்து பார்க்கும் போது, காதில் செவிப்பறை வரை ஒன்றும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் சிறிது நேரம் கழித்து செவிப்பறை அசைவது போல் தெரிந்துள்ளது. அதற்கு பிறகு தான், அது நிஜமான செவிப்பறை இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

spider

அந்த போலியான செவிப்பறையை ஒதுக்கிவிட்டு பார்க்கும் போது, அந்த பெண்ணின் காதுக்குள், சிலந்தி ஒன்று கூடுகட்டி குடும்பம் நடத்திவருவது தெரிந்தது. அதனை கண்ட மருத்துவர்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிகிச்சையில் ஈடுபட்ட செவிமடவியல் மருத்துவரான ஹான் சிங்லாங் கூறுகையில், "சிலந்தி உருவாக்கிய அந்த வலை அப்படியே பார்ப்பதற்கு செவிப்பறை போலவே இருந்தது. முதலில் எண்டோஸ்கோப்பை உள்ளே நுழைத்தபோது, ​பிரச்சனை இருப்பதற்கான எந்த அறிகுறியுமே தென்படவில்லை. ஆனால் கூர்ந்து பார்க்கும்போது, ​​​​செவிப்பறைக்கு அடியில் ஏதோ அசைவது போல் இருந்தது. அதற்கு பிறகு தான் அது போலி செவிப்பறை என்றே தெரிந்தது. அந்த வலையை ஒதுக்கித் தள்ளியபோது, சிலந்தி ஒன்று தென்பட்டது. இறுதியில் ஒருவழியாக சுமூகமாக சிலந்தி வெளியே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

Endoscopy

மேலும் மகிழ்ச்சியான விசயம் என்னவென்றால், அது விசத்தன்மை உள்ள சிலந்தி இல்லை என்றும், காதில் சிறிய சேதம் மட்டுமே ஏற்பட்டிருந்தது என்றும் மருத்துவர் தெரிவித்தார்.