உலகம்

ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட்

ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறிய ராக்கெட்

webteam

தெற்கு சீனாவின் வென்சான்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட லாங்க் மார்ச்-5 என்ற கனரக ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது.

தெற்கு சீனாவின் வென்சான்க் விண்வெளி மையத்திலிருந்து மார்ச்-5 y2 என்ற ராக்கெட் 18 செயற்கைக்கோள்களுடன் நேற்றுகாலை 7.23 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த ராக்கெட் வெடித்து சிதறியது. 

ராக்கெட் வெடித்ததற்கு அதன் இயல்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டதுதான் காரணம் என்று சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 2018 அல்லது 2019 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தர ஆய்வு மையம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், சீனா நேற்று ஏவிய ராக்கெட்டின் முயற்சி தோல்வியடைந்துள்ளது அந்நாட்டிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.