உலகம்

விண்ணில் ஏவத் தயார்... சீனாவின் சரக்கு விண்கலம்

webteam

விண்வெளிக்கு உபகரணங்களை எடுத்துச் செல்லும் தனது முதலாவது விண்கலத்தை ஏவுவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்கிறது சீனா. இந்த விண்கலத்தின் பெயர் தியான்ஷு -1. வரும் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிக்குள் இந்த விண்கலம் விண்ணுக்குச் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாங் மார்ச்-7 என்று ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த விண்கலம், விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் தியாங்காங்-2 ஆய்வு மையத்துடன் இணைய இருக்கிறது. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி அமைக்கும் சீனாவின் கனவை நனவாக்குவதில் இந்த விண்கலத்தின் பயணம் முக்கியப் படியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.