சீனாவில் 2021ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000க்கு 7.52 என குறைந்துள்ளது. இதுவே 2020ஆம் ஆண்டில் 8.52ஆக இருந்தது. கடந்த 1949ஆம் ஆண்டு முதல் பதிவான தரவுகளின் படி, சீனாவில் 2021ஆம் ஆண்டில் தான் குழந்தைகள் பிறப்பு விகிதம் இந்த அளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக சீனா அரசு தெரிவிக்கிறது.
சீனாவில் 2012ஆம் ஆண்டு முதல் உழைக்கும் வயது மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பல லட்சங்களில் குறைந்து வருகிறது. இதனால் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்பவர்களுக்கு சலுகைகளை அரசு அறிவித்தது. எனினும் பிறப்பு விகிதம் குறைந்து வருவது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.