உலகம்

‘நட்பு நாடுகளில் தன்னுடைய ராணுவ பலத்தை அதிகரிக்கிறது சீனா’ - அமெரிக்கா குற்றச்சாட்டு

‘நட்பு நாடுகளில் தன்னுடைய ராணுவ பலத்தை அதிகரிக்கிறது சீனா’ - அமெரிக்கா குற்றச்சாட்டு

webteam

சீனா தனது ராணுவ பலத்தை உலக முழுவதும் அதிகரிப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. 

சீனா அரசு தனது ராணுவத்தை வேகமாக நவீன மையமாக்கிவருகிறது. அத்துடன் சீனா உலகம் முழுவதும் தனது ராணுவ தளத்தை அதிகரித்து வருகிறது. அதேபோல ஓபிஓஆர் கட்டுமான திட்டத்தையும் உலகளவில் பிரபலப்படுத்திவருகிறது. 

இந்நிலையில், சீனாவின் ராணுவ பலம் உலக நாடுகள் பலவற்றில் அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தன்னுடன் நீண்ட நாட்களாக நட்புறவுடன் இருந்துவரும் நாடுகளில் ராணுவ தளம் அமைக்க சீனா முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் ராணுவத்தை நிலை நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இதற்காக இதுவரை சீனா பாகிஸ்தானிற்கு 5 பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் டிஜபோவ்டியில் ராணுவ தளம் அமைத்தலிருந்து சீனா பிற நாடுகளில் இதே போன்ற தளங்கள் அமைக்க திட்டமிட்டுவருகிறது. அதிலும் மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் தளம் உருவாக்க திட்டமிட்டுள்ளது”எனத் தெரிவித்துள்ளது.