உலகம்

சீனா: குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோருக்கும் தண்டனை

சீனா: குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோருக்கும் தண்டனை

Sinekadhara

சீனாவில் குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

குழந்தைகளின் குற்றங்களுக்கு பெற்றோரை பொறுப்பாக்குவதுடன் குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர். பெற்றோர் மட்டுமல்லாமல் குழந்தைகளின் பாதுகாவலருக்கும் இச்சட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த சட்ட முன்வடிவை ஆய்வுசெய்ய உள்ளது.

பெற்றோர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும், விளையாட வேண்டும், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் இந்த சட்டம் பரிந்துரைக்கிறது. குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை தடுக்க, வார இறுதி நாட்களில் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்து சீனா அரசு அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்தது.