bath house china
உலகம்

’வாடகை அப்பா’ சேவை அறிமுகம்.. சீனாவில் பெண்களை கவர்ந்த ‘பாத் ஹவுஸ்’!

உலகின் வல்லரசு மற்றும் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக சீனாவும் திகழ்கிறது. இந்த நிலையில், அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள ‘பாத் ஹவுஸ்’ (Bath House) ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தி அங்குள்ள இளம்பெண்களை வளைத்துள்ளது.

Prakash J

சீனாவின் வடகிழக்கின் லியோனிங் மாகாணத்தில் குளியல் இல்லம் (Bath House) ஒன்று உள்ளது. இந்த இல்லம், ’வாடகை அப்பா’ என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. 'Rent a Dad' என பெயரிடப்பட்டுள்ள இந்தச் சேவை மூலம், தாயுடன் வரும் குழந்தைகளைக் குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை தந்தையர்கள் செய்வார்கள்.

அதாவது, தாய் குளிக்கும்வரை இந்தக் குழந்தைகளை வாடகை தந்தையர்கள் கவனித்துக் கொள்வார்களாம். மேலும், அந்தக் குழந்தைகளுக்கு உடை மாற்றிவிடுவது என அனைத்தையும் கவனித்துக் கொள்வார்களாம். இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுவதால், அதற்குப் பலரும் வரவேற்பு அளித்திருப்பதுடன், பெண்களின் கூட்டமும் அதிகம் படை எடுக்கிறதாம்.

bath house

பெண்களுக்கு மட்டும் உள்ள பகுதிகளில், சிறுவர்கள் நுழைவதைத் தடுக்க இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் மகனுடன் இங்கு வந்தால், தன் மகனை வாடகை தந்தை என அழைக்கப்படும் நபரிடம் ஒப்படைத்து, நீச்சல் குளத்தில் சுதந்திரமாக நீந்தி மகிழலாம். வாடகைத் தந்தை அதுவரை அவருடைய மகனைக் கவனித்து, ஆண்கள் குளிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்வார் என்று அந்த குளியல் இல்லம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த இல்லம், அங்கு ஆண் மற்றும் பெண் சிறுவர்களுக்கான தனித்தனி அறைகளையும் வழங்கியுள்ளது. தவிர, அந்த இல்லம் உணவு, பானம், மசாஜ், பொழுதுபோக்கு மற்றும் பிற வசதிகளை அனுபவிக்கக்கூடிய யுனிசெக்ஸ் லவுஞ்ச் பகுதியையும் ஸ்பெஷலாக செய்து வருகிறது.