கடும் வறட்சியால் சீனாவின் மிகப்பெரிய ஏரியான போயாங் ஏரி வற்றிப்போனது.
சீனாவில் கடந்த சில மாதங்களாக வெப்ப நிலை அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் அங்கிருக்கும் நீர்நிலைகள் அனைத்தும் காய்ந்து வற்றி வருகின்றன.
இந்நிலையில், கடும் வறட்சியால் சீனாவின் மிகப்பெரிய நீர் ஆதாரமான போயாங் ஏரி முழுவதுமாக வற்றி வருகிறது.
இதனால் குடிநீர் இல்லாமல் குடிநீரைத் தேடி மக்கள் அலைந்து திரிந்து வருகிறார்கள்.