உலகம்

'பொருளாதார சரிவிலிருந்து மீள சீனாவை பின்பற்றுங்கள்'-அமெரிக்காவுக்கு சார்லி முங்கர் அறிவுரை

'பொருளாதார சரிவிலிருந்து மீள சீனாவை பின்பற்றுங்கள்'-அமெரிக்காவுக்கு சார்லி முங்கர் அறிவுரை

JustinDurai

கிரிப்டோகரன்சியை தடை செய்ய வேண்டும் என்று குரலெழுப்பி உள்ளார் அமெரிக்க பொருளாதார வல்லுநர் சார்லி முங்கர்

பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் நீண்டகால வணிகப் பங்காளியான சார்லி முங்கர் (99), அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெய்லி ஜர்னல் கார்ப் பதிப்பக நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது வாசகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பெர்க்சயர் ஹாதவே, ''பொருளாதார சரிவை மீட்க அமெரிக்க அரசு சீனாவைப் பின்பற்ற வேண்டும். புவிசார் அரசியல் அபாயங்கள் இருந்தபோதிலும் முதலீட்டாளர்களுக்கு சீனா சிறந்த வாய்ப்பாக உள்ளது. அமெரிக்காவில் உங்களால் முடிந்ததை விட சீனாவில் மலிவான விலையில் சிறந்த, வலுவான முதலீடுகளை நீங்கள் வாங்கலாம். கிரிப்டோகரன்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். எனது இத்தகைய நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் புத்திசாலி, நடைமுறை தெரிந்தவர். ரஷ்யா நேர்வழியில் உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதேபோன்று தைவான் விவாகரத்தில் சீனா அப்படி நேர்வழியில் செயல்படும் என்று நான் எதிர்பார்க்கப் போவதில்லை. எலான் மஸ்க்கின் டெஸ்லா தனது பங்கு விலைகளை குறைத்துக்கொண்டிருக்கும் வேளையில், BYD விலைகளை உயர்த்தி வருகிறது, இதனால் சீனாவில் டெஸ்லாவை விட BYD முன்னணியில் உள்ளது. இது கிட்டத்தட்ட அபத்தமானது" என்று சார்லி முங்கர் கூறினார்.