நிலவின் சுற்றுவட்டப் பாதை புதிய தலைமுறை
உலகம்

"ஆக. 23ல் மிகப்பெரிய சவால் காத்திருக்கு" - நிலவின் புவிவட்ட பாதைக்குள் சந்திரயான் 3! அடுத்து என்ன?

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் சென்றுள்ள நிலையில், அதன் அடுத்தகட்ட நகர்வு குறித்து பார்க்கலாம்.

PT WEB

சந்திரயான் விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி எல்.வி.எம் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 179 கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம், 16 நிமிடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மறுநாளான 15 ஆம் தேதி சந்திரயான் விண்கலம், முதல்சுற்று வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சந்திரயான் 3 விண்கலம் சென்றுள்ள நிலையில், அதன் அடுத்தகட்ட நகர்வு குறித்து விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி வெங்கடேஷ்வரனுடன் சொல்வது குறித்துப் பார்க்கலாம்.