உலகம்

மாருதி முன்னாள் நிர்வாக இயக்குநர் மீது சிபிஐ வழக்கு

மாருதி முன்னாள் நிர்வாக இயக்குநர் மீது சிபிஐ வழக்கு

jagadeesh

வங்கிக் கடன் மோசடி செய்த விவகாரத்தில் மாருதி உத்யோக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜக்தீஷ் கட்டார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 110 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய குற்றத்திற்காக ஜக்தீஷ் கட்டார் மற்றும் அவரின் காரனேஷன் ஆட்டோ நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று மாலை ஜக்தீஷ் கட்டார் மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

முன்னதாக, ஜக்தீஷ் கட்டார் மாருதி உத்யோக் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் அவர் தொடங்கிய காரனேஷன் ஆட்டோ என்ற நிறுவனத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2009ஆம் ஆண்டு 170 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால், 2015ஆம் ஆண்டு இது வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த குற்றத்திற்காக கட்டார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.