உலகம்

காப்பாற்றப்பட்ட வழிதவறிய யானைக்குட்டி.... தாயைப் போல அருகில் உறங்கிய அன்பு மனிதர்

காப்பாற்றப்பட்ட வழிதவறிய யானைக்குட்டி.... தாயைப் போல அருகில் உறங்கிய அன்பு மனிதர்

webteam

கென்யாவைச் சேர்ந்த செல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவர், போர்வையால் போர்த்தப்பட்ட யானைக்குட்டியுடன் ஒரு தாயைப்போல தரையில் உறங்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. அந்த அன்பு மனிதரின் கருணையை மக்கள் பாராட்டிவருகின்றனர்.

அந்த வழிதவறிய யானைக்குட்டியைக் காப்பாற்றி, அது தன் தாயுடன் இருப்பதைப் போல உணரச்செய்யும் விதத்தில் அதற்கு அருகில் படுத்துறங்கினார் பராமரிப்பாளர். சில நாட்களுக்கு முன்பு, விலங்குக் காப்பகப் பணியாளர்கள் கருப்பு வெள்ளை உடையணிந்து வரிக்குதிரைக் குட்டிக்கு தாயைப்போல தோற்றத்தைத் தந்தனர். இதுவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதேபோல இந்தச் சம்பவமும் பலருடைய உள்ளங்களைக் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படமும் செய்தியும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், காட்டில் குட்டி யானை, தன்னுடைய தாய் மற்றும் மந்தையின் பாதுகாப்பு நிழலின் கீழ் தூங்குகிறது என்று பதிவிட்டுள்ளனர்.

யானைக் குட்டி மந்தையில் இருந்து  விலகி வழிதவறியது. கடைசியில் அதைக் கண்டுபிடித்த பராமரிப்பாளர், அது தனித்துவிடப்பட்டதாக நினைக்கக்கூடாது என்பதற்காக அதை போர்வையால் போர்த்தி, அருகிலேயே படுத்து உறங்கியது உலகையே உலுக்கிவிட்டது.