உலகம்

கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான ஏலக்காய் பறிமுதல் இருவர் கைது

கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான ஏலக்காய் பறிமுதல் இருவர் கைது

webteam

தமிழ்நாட்டில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ,1.5 கோடி மதிப்பிலான ஏலக்காய் பறிமுதல் இலங்கையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி விஜய கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து வீடு ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது இரண்டு சரக்கு வாகனங்களில் தேங்காய்களுக்குள் ஏலக்காய் மூட்டைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் சுமார் ரூ.1.5 கோடி (இலங்கை மதிப்பு) மதிப்பிலான 1330 கிலோ எடை கொண்ட முதல் தரமான ஏலக்காய் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவரை போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் சட்டவிரோதமாக தமிழகத்தில் இருந்து நாட்டுப்படகில் கடல் வழியாக கொண்டுவரப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மூட்டை சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலானது என போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஏலக்காய் மூட்டைகளையும் மற்றும் இரண்டு சரக்கு வாகனங்களையும் கட்டுநாயக்க சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.