அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் செய்தி நிறுவனத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் அன்னபோலிஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ‘தி கேப்பிடல் கெசட்’ ( the Capital Gazette) என்ற செய்தி நிறுவனத்திற்குள் நுழைந்த நபர், திடீரென அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் செய்தியாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து கட்டடத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர். தொடர்ந்து துப்பாக்க்சூடு நடத்திய நபரை கைது செய்தனர். இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் , கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சில குண்டுகளை கைபற்றியதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சமீப காலத்தில் இந்த செய்தித்தாள் நிறுவனத்திற்கு சமூக ஊடகங்களில அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே துப்பாக்கிசூடு நடத்திய நபர் குறித்து கடந்த 2011ஆம் ஆண்டு இந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்ததும் , அது குறித்து இவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.