உலகம்

"தடுப்பு மருந்து பற்றிய ட்ரம்பின் அறிவிப்பில் நம்பிக்கையில்லை"-கமலா ஹாரிஸ் !

"தடுப்பு மருந்து பற்றிய ட்ரம்பின் அறிவிப்பில் நம்பிக்கையில்லை"-கமலா ஹாரிஸ் !

jagadeesh

நவம்பர் 1-ஆம் தேதி கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வாக்குறுதியை நம்ப போவதில்லை என ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்,  அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றிபெறும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் என பல புதிய சாதனைகளை பதிவு செய்வார்.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தவறவிட்ட ட்ரம்ப் ,அதனை மறைப்பதற்காக தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் என சாடியுள்ள கமலா ஹாரிஸ், நோய் பரவலை கட்டுப்படுத்த ட்ரம்பிடம் எவ்வித திட்டமிடலும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது உண்மை தான் என கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.