ஜஸ்டின் ட்ரூடோ முகநூல்
உலகம்

மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ... ஏன்?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

PT WEB

நாஜி படை வீரருக்கு தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் கவுரவம் அளித்ததற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாஜி படையில் இருந்த நபருக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது நாடாளுமன்றத்திற்கும் கனடாவிற்கும் பெரும் சங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ- சபாநாயகர் அந்தோணி ரோட்டா

குறிப்பிட்ட நபர் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டதற்கு சபாநாயகர் அந்தோணி ரோட்டாதான் காரணம். எனினும் நடந்துவிட்ட தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.” என்று ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனி நாட்டில் ஹிட்லரின் நாஜி படைகள் ஏராளமான யூதர்களை கொன்று குவித்தன. இதன் காரணமாக மேற்கத்திய நாடுகளில் கடுமையான நாஜி எதிர்ப்பு மனநிலை உள்ள நிலையில், அப்படையில் இருந்தவருக்கு கனடா நாடாளுமன்றத்தில் வரவேற்பு தரப்பட்டது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து சபாநாயகர் அந்தோணி ரோட்டா ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் ட்ரூடோவும் மன்னிப்பு கேட்டுள்ளார்.