உலகம்

மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Rasus

லேசர் கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜெரார‌ட் மௌரு, கனடாவைச் சேர்ந்த டான்னா ஸ்ட்ரிக்ட்லேண்ட் ஆகியோர் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லேசர் கதிர்கள் மூலம் நுண்ணுயிரிகளை ஈர்ப்பது, கண் அறுவைச் சிகிச்சை போன்றவற்றில் லேசரை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை இந்த விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்களில் டான்னா ஸ்ட்ரிக்ட்லேண்ட், இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெறும் மூன்றாவது பெண் விஞ்ஞானி என்ற பெருமையைப் பெறுகிறார்.

புற்றுநோய் தொடர்பான மருத்துவ கண்டுபிடிப்புக்காக ஜேம்ஸ் பி.ஆலீஸன், தசுகோ ஹோஞ்ஜோ ஆகிய இருவருக்கும் மருத்துவதற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.