உலகம்

கனடாவின் டர்பன் கட்டிய முதல் பெண் நீதிபதி

கனடாவின் டர்பன் கட்டிய முதல் பெண் நீதிபதி

webteam

கனடாவில் முதன் முதலாக டர்பன் கட்டிய பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பர்பிண்டர் கவுர் ஷெர்கில் என்ற அந்த இந்திய வம்சாவழி பெண்ண் கனடாவின் முதல் டர்பன் கட்டிய பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெறுகிறார்.

நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பர்பிண்டர் கவுர் ஷெர்கில் நான்கு வயதாக இருக்கும் போதே அவரது குடும்பம் பஞ்சாபிலிருந்து கனடா சென்று விட்டது.

ஷெர்கில் கனடாவில் மிக முக்கியமான மனித உரிமை வழக்கறிஞராக அறியப்பட்டவர். இவர் பிரிடிஷ் கொலம்பியாவில் உள்ள வில்லியம்ஸ் லேக் பகுதியில் வளர்ந்தவர், சாஸ்கட்ஷேவான் பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் பட்டம் பெற்றார். பல நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கனடாவின் உலக சீக்கியர்கள் அமைப்பின் சட்ட நிபுணராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கனடா உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ளார். இவர் கனடாவின் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.