ஹெச்ஐவி மருந்து கொரோனா சிகிச்சையில் பயன்படுமா? - மேற்கொள்ளப்படும் புதிய ஆய்வுகள்
ஹெச்ஐவி-க்கான மருந்துகளை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
10 தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் தடுப்பு மருந்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்குள் லட்சக்கணக்கிலான டோஸ்களில் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சௌமியா சுவாமிநாதன், தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் கிடைத்த உடன் முதலில் முன்கள பணியாளர்களுக்கும், வயதானவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்படுமென கூறியுள்ளார்.