உலகம்

இட்லி, தோசையை விரும்பி சாப்பிடும் வெளிநாட்டினர்.. அசத்தும் கம்போடியா உணவகம்

இட்லி, தோசையை விரும்பி சாப்பிடும் வெளிநாட்டினர்.. அசத்தும் கம்போடியா உணவகம்

webteam

கம்போடியா நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், தமிழக உணவுகளை உண்ண விரும்பி, இதற்கான உணவகங்களை தேடிவருகிறார்கள்.

கொரோனா காலகட்டத்திற்குப்பிறகு கம்போடியாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில், இவர்கள் தேடி உண்ணும் சுவையான உணவு வகைகளில் தமிழகத்தின் உணவுகளுக்கு தனி இடம் இருக்கிறது. சியாம் ரீப் நகரில் 10 ஆண்டுகளாக தமிழர் ஒருவர் நடத்தும் உணவகத்தில் இட்லி, தோசை, வடை, சைவ உணவு வகைகளும், மதிய நேரத்தில் பிரியாணியும் சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்திற்குரிய தேர்வாக உள்ளது.

2005 ம்ஆண்டுவாக்கில், தமிழர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் கம்போடியாவில் குடிபெயர்ந்தனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் உணவு சமைத்தாலும் தற்போது கம்போடிய பெண்களும் தமிழக உணவுகளை சமைத்து வருகின்றனர். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என பல நாடுகளில் இருந்து தமிழர்கள் வருகை இருப்பதால் WiFi வசதி மற்றும் கம்போடியா வரும் முன்பே முன்பதிவு செய்துக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.