உலகம்

யூத வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு, மாணவர் கைது!

யூத வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு, மாணவர் கைது!

webteam

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே (Poway)நகரில் யூத வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு  ஏராளமா னோர் கூடி, பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த வாலிபர் ஒருவர் தனது துப்பாக்கி யால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக் கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் காரில் தப்பிய துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் சிறிது நேரத்திலேயே மடக்கிப் பிடித்தனர். அவர் ஜான் எர்னஸ்ட்(19) என்பதும் பல்கலைக்கழக மாணவர் என்பது தெரியவந்துள்ளது. ஜான், ஏ.ஆர். 15 ரக துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளார். அமெரிக்காவில் நடந்துள்ள பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இந்த ரக துப்பாக்கிகள்தான்  பயன் படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த 6 மாதங்களுக்கு முன், பிட்ஸ்பர்க் நகரில் யூத வழிபாட்டுத்தலத்தில் இதே போன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத் தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இப்போது மீண்டும் யூத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.