உலகம்

கான்கிரீட் சந்துக்குள் சிக்கிய நாய் - போராடி மீட்ட போலீஸ் 

கான்கிரீட் சந்துக்குள் சிக்கிய நாய் - போராடி மீட்ட போலீஸ் 

webteam

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பகுதியில் கான்கிரீட் தளத்தில் மாட்டிக்கொண்ட நாயை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டுள்ளனர்.


அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பகுதியில் நாய் ஒன்று வீட்டின் வெளியே உள்ள கான்கிரீட் பகுதியிலுள்ள ஒரு சந்துக்குள் மாட்டிக்கொண்டது. ஆகவே உள்ளே புகுந்த நாயினால் திரும்ப வெளியே வர முடியவில்லை. அதன் தலைப்பகுதி மாட்டிக் கொண்டு விட்டது. அந்த நாய் வலித்தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. உடனே வீட்டின் உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நாயை மீட்க சில ட்ரில்லிங் மெஷின், மற்றும் கட்டர் மெஷினை பயன்படுத்தினர். அந்த உபகரணங்கள் மூலம் கான்கிரீட் தளத்தை வெட்டி எடுத்தனர். அதன்பிறகு உள்ளே சிக்கி இருந்த நாயை வெளியே மீட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் தீயணைப்பு துறையினர் லாகவமாக நாயை காப்பாற்றும் காட்சி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.