அதிக எடையுடன் வாழ்ந்த இளைஞர் twitter
உலகம்

மன உளைச்சலால் உணவு அதிகரிப்பு; 34 வயது இளைஞர் மரணம்

Jayashree A

மன உளைச்சலால் அதிக உணவை எடுத்துக்கொண்டு உடல்பருமனான இளைஞர் தனது 34 வயதிற்கு முன்னதாக இறந்த செய்தி வைரலாகி வருகிறது.

obesity உடல் பருமன். முன்பெல்லாம், பெரியவர்களுக்கு மட்டுமே இருந்த இந்த பிரச்னை, தற்பொழுது இளம் தலைமுறைகளையும் விட்டுவைக்காமல் சோதித்து வருகின்றது.

பொதுவாக உடல் பருமன் என்பது மரபணு ரீதியாக அடுத்த தலைமுறையைத் தாக்கும் ஒரு வகை பிரச்னை. ஆனால் தற்பொழுது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் வளரும் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரிடம் அதிகமாக உடல் பருமன் பிரச்னை காணப்படுகிறது.

உடல் பருமனுக்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம். அதிகமாக ஜங்க் புட் மற்றும் சோடா நிறைந்த பானங்கள், அதிகமான இனிப்பு நிறைந்த சாக்லேட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், சரியான நேரத்திற்கு உணவருந்தாமல் இருப்பது, போதிய தண்ணீர் அருந்தாமல் இருப்பது இது போன்ற காரணங்களால் உடல் பருமனானது ஏற்படுகிறது.

தவிரவும், அதிகமான வெண்ணெய் மற்றும் மாவு உணவுப்பொருட்கள், இரவு நேரங்களில் தொடர்ந்து சாப்பிடுதல், செரிமானமின்மை, தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பின்மை போன்றவையும் உடல் பருமனாவதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல உடல் பருமனுடன் உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், தூக்கமின்மை, மன அழுத்தம், எலும்பு பிரச்னை, மூட்டுவலி போன்ற நோய்களும் கூடவே வந்துவிடும். அதுமட்டுமல்ல, இளம் வயதில் வரக்கூடிய இருதய நோய்க்கு முக்கிய காரணமே உடல் பருமன்தான் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த அதிக உடல் பருமன் கொண்ட இளைஞர் ஒருவர் தனது 34 வது வயதில் இறந்தது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜேசன் ஹோல்டன் என்ற அந்த இளைஞர், தனது தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகி அதிகப்படியாக உணவை உட்கொண்டு வந்துள்ளார். இதனால் இவர் தனது 34 வயதிற்குள் 500 கிலோ எடை வரை அதிகரித்துள்ளார். இவரின் அதிகப்படியான உடல் எடை, பல உறுப்புகளை பாதித்து, செயலிழக்க செய்துள்ளது. அதனால் தனது 34-வது பிறந்த தினத்திற்கு சில நாட்களுக்கு முன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.