Iran president Ebrahim Raisi - helicopter crash PT
உலகம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் அணை திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பியபோது இந்த ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது. ஹெலிகாப்டர் முற்றிலும் உருக்குலைந்ததாகவும் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது.

PT WEB

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. மூடுபனி காரணமாக அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

அடர்ந்த வனம் மற்றும் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. இருப்பினும் ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் அணை திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பியபோது இந்த ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது. ஹெலிகாப்டர் முற்றிலும் உருக்குலைந்ததாகவும் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என முதற்கட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் உள்ளிட்டோர் இருந்தனர். அதேபோல், ஹெலிகாப்டரில் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் பல்வேறு அதிகாரிகள் பயணித்துள்ளனர்.

அதிபர் உள்ளிட்டோரின் இறப்பால் அந்நாட்டு மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.