Jefferson Machado Twitter
உலகம்

காணாமல் போன பிரேசில் நடிகர், 4 மாதங்களுக்குப்பின் அதிர்ச்சியூட்டும் வகையில் சடலமாக மீட்பு!

கடந்த ஜனவரி மாதம் காணாமல்போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த நடிகர் ஜெபர்சன் மச்சோடோ (44), நான்கு மாதங்களுக்கு பிறகு மரப்பெட்டிக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Jagadeesh Rg

ஜெஃப் என்று அழைக்கப்படுபவர் ஜெபர்சன் மச்சாடோ. இவர் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி காணாமல் போனார். இந்நிலையில், இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மரப்பெட்டியில் புதைக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

Jefferson Machado BOX

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போனது நடிகர் ஜெபர்சன் என்பது தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அவரது கழுத்தில் இரும்பு கம்பி சுற்றப்பட்டு, கைகளும் கட்டப்பட்டிருந்தாக பிரேசில் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ‘அவரது உடலில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக ரசாயன திரவம் ஊற்றப்பட்டிருந்தது. கைரேகையைப் பயன்படுத்தி சடலம் அடையாளம் காணப்பட்டது. கழுத்தில் கோடு இருந்து. அது அவர் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது’ என அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காவல்துறை தரப்பில் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jefferson Machado

சடலம் கண்டெடுக்கப்பட்ட வீட்டை வாடகைக்கு எடுத்த பொலிஸார் என்பவரை தற்போது விசாரித்து வருகின்றனர். சந்தேக நபராக கருதப்படும் இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்துள்ளார். இவர் ஜெஃப்-க்கு நன்கு அறிமுகமானவர் என கூறப்படுகிறது.

ஜெஃபின் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது குடும்ப நண்பர் சின்டியா ஹில்சென்டேகர் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "05/22/2023 (மே 22) அன்று ஜெஃப் உயிரற்ற நிலையில் காணப்பட்டதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.