bosch x page
உலகம்

தொடரும் பணி நீக்கம் | இந்த முறை Bosch குழுமம்... 7,000 பேரை நீக்க முடிவு?

Bosch நிறுவனம் தன்னுடைய 7,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பல முன்னணி நிறுவனங்கள், தொடர்ச்சியாக செலவைக் குறைக்கும் வகையில் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. அதில், சில நிறுவனங்கள் எதிர்காலத்தில் பணி நீக்கம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளன. தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் காரணமாக, மீண்டும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், ஜெர்மனியை தளமாகக் கொண்ட பன்னாட்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான Bosch Group, தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் உலகளவில் முன்னணியில் உள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிரேக் பேடுகள், சென்சார்கள், டிஸ்க்குகள் மற்றும் சேஃப்டி சிஸ்டம்கள் போன்ற வாகன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

இதையும் படிக்க: ம.பி: மனைவி முன்பு ‘அங்கிள்’ என அழைப்பு.. கோபத்தில் ஜவுளிக்கடைக்காரரை தாக்கிய நபர்!

இந்த நிலையில், Bosch நிறுவனம் தன்னுடைய 7,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Bosch நிறுவனம், சுமார் 7,000 பேரை பணிநீக்கம் செய்யும் என்று அந்நிறுவனத்தின் CEO-வான ஸ்டீபன் ஹார்டுங் தெரிவித்துள்ளார். தொழில்துறையில் ஏற்பட்டிருக்கும் சவாலான சூழ்நிலையே, இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பணி நீக்கமானது, ஜெர்மனியில் உள்ள பல்வேறு ஆலைகளில் பணிபுரியும் 7,000 ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கடந்த ஆண்டு Bosch நிறுவனத்தின் வருவாய் 98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது மற்றும் 5% லாபம் ஈட்டியது. ஆனால் 2024ஆம் ஆண்டில் 4 சதவீதம் மட்டுமே லாப விகிதம் இருக்கும்” என்று பாஷ்-இன் சிஇஓ ஸ்டீபன் ஹார்டுங் கூறியுள்ளார். மேலும் அவர், “2025-ஆம் ஆண்டில், நிறுவனம் விற்பனையில் 7% லாபத்தை அடைய இலக்கு வைத்துள்ளது” என்றும் கூறினார். அறிக்கையில், பாஷ் சமீபத்திய மாதங்களில் தனது உலகளாவிய பணியாளர்களை குறைக்க தொடர்ந்து அறிவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் Bosch, ஐரிஷ் நிறுவனமான ஜான்சன் கன்ட்ரோல்ஸ் நிறுவனத்தை வாங்க இருக்கிறது. இதன்மூலம் தனது பலத்தை, சந்தையில் காட்ட இருக்கிறது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல் | விலகிய மராத்தா சமூகத் தலைவர்.. பின்னணி காரணம் என்ன?