உலகம்

''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

Sinekadhara

பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா, முந்தைய கொரோனாவை விட ஆபத்தானது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உருமாறிய கொரோனா வேகமாக பரவும் என்ற தகவலுடன், அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். லண்டனில் உள்ள இம்பிரீயல் கல்லூரியை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளும் உருமாறிய கொரோனா எந்த அளவிற்கு ஆபத்தானது என்பது குறித்து தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.

அதில், முந்தைய கொரோனாவை விட, உருமாறிய கொரோனா மிகவும் ஆபத்தானது என்றும், ஆனால், எந்த அளவிற்கு அதை உறுதிப்படுத்துவது என்பது தெரியவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேசமயம் பழைய கொரோனா ஆயிரம் பேரை தாக்கினால், அதில் 10 பேர் மட்டுமே உயிரிழந்து வந்தனர். ஆனால், உருமாறிய கொரோனாவால், உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.