உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு வந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சிறிது நேரத்திலேயே மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முந்தி, அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பேசோஸ் சிறிது நேரத்திற்கு முதலிடத்தில் இருந்தார். இந்தத் தகவலை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆன்லைன் வர்த்தக நி்றுவனங்களின் பங்குகள் சந்தையில் விற்பனையானதை அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த நேரத்தில், அமேசான் நிறுவனத்தின் பங்கு வர்த்தக மதிப்பு 90.60 அமெரிக்க மில்லியன் டாலராகவும், பில்கேட்ஸின் பங்கு வர்த்தக மதிப்பு 90 மில்லியன் டாலராகவும் இருந்துள்ளது. சில மணி நேரத்திலேயே அமேசான் நிறுவனத்தின் பங்கு விற்பனை சரிந்ததால், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்திற்கு வந்தார்.