உலகம்

அன்று புஷ்.. இன்று பைடன்: 12 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் குடியேறிய பூனை!

அன்று புஷ்.. இன்று பைடன்: 12 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் குடியேறிய பூனை!

கலிலுல்லா

வெள்ளை மாளிகையில் ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு பிறகு பூனை ஒன்று குடியேறியுள்ளது.

அதிபர் ஜோ பைடனின் குடும்பத்தினர் 2 வயது பூனையை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்துள்ளனர். ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் சொந்த ஊரை நினைவு கூரும் வகையில் வில்லோ என இந்த பூனைக்கு பெயர் சூட்டியுள்ளனர். 2020ஆம் ஆண்டு ஜில் பைடனின் தேர்தல் பரப்புரையின் போது திடீரென மேடையில் தோன்றி அமர்க்களம் செய்தது இந்த பூனை.

பைடன் அதிபரானால் இந்த பூனையை வெள்ளை மாளிகைக்கு அழைத்து செல்வோம் என ஜில் பைடன் அப்போதே கூறி இருந்தார். முன்னதாக 2009ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையில் பூனை வளர்க்கப்பட்டது.