உலகம்

தண்ணிக் குடிச்சா குத்தமா? கேட்கிறார் பூட்டோ மகள்

webteam

பாகிஸ்தான் முழுவதும் ரம்ஜான் மாதத்தில் பொது இடங்களில் தண்ணீர் குடிப்பவர்கள், உணவு உண்பவர்களை கைது செய்யும் அரசின் முடிவுக்கு முன்னாள் பிரதமர் பெனாஷிர் பூட்டோவின் மகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசின் எம்பிகள் அடங்கிய இஸ்லாமிய பாதுகாப்பு குழு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ரம்ஜான் மாதம் முழுவதும் பொது இடங்களில் புகைப்பவர்கள், தண்ணீர் குடிப்பவர் மற்றும் உணவு உண்பவர்கள் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின்படி, இனிமேல் ரம்ஜான் மாதம் முழுவதும் பொது இடங்களில் தண்ணீர் குடிக்க, புகைக்க, உணவு சாப்பிட, தடை விதிக்கும் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை மீறினால் 500 ரூபாய் அபராதமும் 3 மாதம்ள் சிறையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தை முன்னாள் பிரதமர் பெனாஷிர் பூட்டோவின் மகளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பக்தாவர் பூட்டோ கண்டித்துள்ளார். சமூக வலைதளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கடுமையான வெப்பம் வீசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தண்ணீர் குடித்தால் தண்டனை என்பது போன்ற கொடுமையான சட்டம் போடுகிறார்கள். இது போன்ற சட்டங்கள் இஸ்லாமிய மதத்தில் இல்லை. இந்த புதிய சட்டத்தின் மூலம் முதியவர்கள், நோயாளிகள், பள்ளிக் குழந்தைகள் கடுமையாகப் பாதிப்படைவர் என தெரவித்துள்ளார்.