தணிக்கை விவகாரம் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டதால், மியான்மர் தொலைக்காட்சியுடன் செய்து கொண்ட உடன்பாட்டை பிபிசி நிறுவனம் முறித்துக் கொண்டிருக்கிறது.
ரோஹிங்யா இஸ்லாமியர் தாக்கப்படுவது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக பிடிஐ வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மியான்மரில் ஊடகங்கள் நசுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் எம்என்டிவி எனப்படும் மியான்மர் தொலைக்காட்சியில் பிபிசியின் செய்தித் தொகுப்பு வெளியிடப்பட்டு வந்தது. ஒவ்வொரு நாளும் சுமார் 37 லட்சம் பேர் இதைப் பார்த்து வந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.